“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” رَّبِّ زِدْنِي عِلْمً -அல் குர்ஆன் : 20 -114
கல்வி கற்றவர்களாக இருங்கள் ; கற்றுக்கொடுப்பவர்களாக இருங்கள்;
கற்பவர்களுக்கும் கற்றுக்கொடுப்பவர்களுக்கும் உதவி செய்பவர்களாக இருங்கள் - நபி மொழி

Tuesday, February 15, 2011

இன்றைய ஹதீஸ்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'



(கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், 'இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்' அல்லது 'இரவில் நின்று வணங்கிப் பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார்'.


என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
 
Volume :6 Book :69 Shahih Bukhari

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:



நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான்.


என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Volume :3 Book :55  Shahih Bukhari




No comments:

Post a Comment