“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” رَّبِّ زِدْنِي عِلْمً -அல் குர்ஆன் : 20 -114
கல்வி கற்றவர்களாக இருங்கள் ; கற்றுக்கொடுப்பவர்களாக இருங்கள்;
கற்பவர்களுக்கும் கற்றுக்கொடுப்பவர்களுக்கும் உதவி செய்பவர்களாக இருங்கள் - நபி மொழி

Wednesday, February 9, 2011

சுற்றுச்சூழல் பாதுகாக்க சில குறிப்புகள்...

வீடு, அலுவலகங்களில் குண்டு பல்புகள் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள்!

வீடு கட்டும்போது முழுக்கவும் கான்க்ரீட்டால் கட்டாமல், வீட்டின் பின்புறம் சிறு தோட்டம் அமைத்து செடிகள் வளர்க்கலாம்!

டிராஃபிக்கில் இருக்கும்போது வண்டியை 'ஆஃப்’ செய்துவிடுங்கள்!

குளிர் சாதனப் பெட்டிகளை அதிகமாக உபயோகிக்காதீர்கள்!

வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என்று தனியாகப் பிரித்துவைக்கலாம்!

கூடுமானவரை சொந்த வாகனங்களைத் தவிர்த்து, பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தலாம். சைக்கிள் உபயோகிப்பது இன்னும் சிறப்பு!

கடைகளுக்குச் செல்லும்போது பை எடுத்துச் செல்லலாம். அங்கு சென்று பிளாஸ்டிக் பைகளை வாங்கி பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள்!

ஒரு முறை உபயோகப்படுத்திய பொருட்களை மீண்டும் இன்னொரு முறைப் பயன்படுத்த முடியுமா என்று பார்க்க வேண்டும். முடிந்தால் அதை நடைமுறைப்படுத்துவது நல்லது!

மறுசுழற்சி செய்யத்தக்க பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவது செலவுகளைக் குறைப்பதுடன் சூழலையும் பாதுகாக்கும்!

கணினியில் பிரின்ட்-அவுட் எடுக்கும்போது ஒரு தாளின் இரண்டு பக்கத்தையும் பயன்படுத்தலாம். இதனால் பேப்பர் பயன்பாடு குறையும்!

பள்ளி, கல்லூரி, அலுவலகம் ஆகியவற்றில் சிறு குழுக்களை ஏற்படுத்தி சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை நடத்தலாம்!

- இவை எல்லாம் அடிப்படை விஷயங்கள். இவற்றை நீங்கள் பின்பற்றினாலே சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றுகிறீர்கள் என்பது தெளிவாகும்!
பப்ளிக் எக்ஸாம் பதற்றம் வேண்டாம்!

அக்னி நட்சத்திர வெயிலுக்கு முன்னரே தமிழகத்தில் ப்ளஸ் டூ மற்றும் 10-வது பொதுத் தேர்வின் அனல் தகிக்கத் துவங்கிவிடும். தேர்வு பதற்றம் உண்டாக்கும் அதீத பயம் மற்றும் டென்ஷனால் நன்றாகப் படிக்கும் மாணவர்கள்கூட பரீட்சை சமயம் தங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்த முடியாமல் திணறிப் போவார்கள். டென்னிஸ், செஸ் போட்டிகள், ஓட்டப் பந்தயங்கள் போன்ற திறன் சோதனைகளுக்கு உடலையும் மனதை யும் தயார்படுத்துவதுபோல, பரீட்சைகளுக்கும்

மாணவர்கள் தங்களைத் தயார்படுத்த வேண் டும். இது பெற்றோர்-மாணவர் இருவருக்கும் பொதுவான வழிகாட்டுதல்கள்!
'மன உளைச்சல்களில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?’ என்று வழிகாட்டுகிறார் உளவியல் நிபுணர் திருநாவுக்கரசு.
''படிப்பு, அசைன்மென்ட், பரீட்சை, வகுப்பறை இதுதான் இன்று மாணவர்களின் உலகமாக இருக்கிறது. இதில் தோற்றுப்போனால் வாழ்க்கையே முடிந்துவிடும் என்று தப்பான கண்ணோட்டத்தை தங்களுக்குள் மாணவர்கள் வளர்த்துக்கொள்கிறார்கள். இதற்கு பள்ளியின் இறுக்கமான சூழலும் ஒரு காரணம். 'படிக்கிறதைவிட உனக்கு என்ன வேலை?’, 'ரெண்டு பேருக்கும் ஒண்ணாத்தானே சொல்லித்தரேன்.. நீ மட்டும் ஏன் இப்படி மக்கா இருக்க?’, 'நீ எல்லாம் படிக்க வரலைன்னு யார் அழுதா?’ இப்படி கடுமையான வார்த்தைகளை ஆசிரி யரிடம் இருந்து எதிர்கொள்ளும்போது, மாண வர்கள் தங்களைத் தாங்களே குறைத்து மதிப்பிட்டுக்கொள்கிறார்கள். அதற்கு ஏற்றாற் போல சில பெற்றோர்களும் 'ஏன் படிக்காம எங்க மானத்தை வாங்குற?’ என்று பழிக்கும்போது, 'மார்க்குகளைக் குவித்தால் மட்டும் போதும்!’ என்கிற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் மாணவர்கள். முடிவில் கல்வி என்பது அவர்களின் கண்ணோட்டத்தில் எரிச்சலோடு எதிர்கொள்ளும் அத்தியாவசிய 'பொருள்’ ஆகிவிடுகிறது!
மாணவர்களின் பயத்துக்கு ஒரு விதத்தில் பெற்றோர்களும் காரணம். தங்களது சுயமரியாதைக்காகவும், கட்டிய பணம் வீணாகக்கூடாது என்பதற்காகவும் பிள்ளைகளின் மனநிலை புரியாமல் நடந்து கொள்கிறார்கள் பல பெற்றோர்கள். 'உங்க பிள்ளை எவ்வளவு மார்க்?’ என்று உறவினர்கள் கேட்கும்போது அதிக மார்க் சொல்வதை தங்களின் 'ஸ்டேட்டஸ் சிம்பலாக’ பெற்றோர் கள் கருதுவதுதான் பிரச்னையின் ஆணிவேர். தங்களால் படிப்பில் ஸ்கோர் செய்ய முடியாதபோது, 'தான் எதற்கும் லாயக்கு இல்லை’ என்கிற எதிர்மறை எண்ணம் மாணவனின் மனதை ஆக்கிரமிக்கிறது. இதனால்தான் சிலர் பரீட்சை முடிவில் தோற்றுப்போனவுடன் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். தங்கள் பிள்ளைகளை பெற்றோர்களே புரிந்து கொள்ளவில்லை என்றால், ஆசிரியர்கள் எப்படி புரிந்துகொள்வார்கள்?
உங்கள் குழந்தைகளிடம் தினமும் அனு சரணையாக இரண்டு வார்த்தைகள் பேசுங்கள். 'உன்னால் முடியும் கண்ணா’ என்று அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுங்கள். 'பரீட்சை என்பது வாழ்க்கை அல்ல; அது திறமையை சோதிக்கும் ஒரு விஷயம்’ என்பதை பெற்றோர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும் புரியவைக்க வேண்டும்.
மாணவர்கள் புதிதாக படிப்பதைவிட, ஏற்கெனவே படித்த பாடங்களை எழுதிப் பழக வேண்டும். இதன் மூலம் பரீட்சையில் யோசிப்பதற்கு நேரத்தை செலவழிக்காமல் தெரிந்ததை எழுதி தேர்வு பெற முடியும். எந்நேரமும் பரீட்சையைப்பற்றி யோசிக்காமல் நேரத்துக்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். காலத்துக்கு தூங்க வேண்டும். தூக்கத்தைத் தொலைத்துப் படித்தால், நீங்கள் எவ்வளவு படித்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் மூளையில் விஷயங்கள் பதிவாகாது. மேலும், மூளை சுறுசுறுப்பாக இயங்க இன்சுலின் அவசியம் தேவை. அதற்கு சரி யான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். நிச்சயம் எல்லோரும் சாதிக்கலாம். ஆல் தி பெஸ்ட்!'' என்று உற்சாகமூட்டி முடிக்கிறார் திருநாவுக்கரசு.
''தேர்வுக்கு மனதைப் பக்குவப்படுத்துவதுபோல, உடலுக்கும் உத்வேகத்தை அளிக்க வேண்டும். ஏனெனில் நமது எண்ணம், சிந்த னைகளை செயல் வடிவமெடுக்க வைப்பது உடல்தானே!'' என்கிறார் டயட்டீசியன் தாரிணி கிருஷ்ணகுமார். ''தேர்வு சமயம் மாணவர்கள் புரதச்சத்து அதிகம் உள்ள முளை கட்டிய பயிறு, முட்டை போன்ற பொருட்களை அதிகமாக உட்கொள்ளலாம். ஏனென்றால் புரதங்கள் மூளையை சுறுசுறுப்பாக இயங்கவைக்கும். எண்ணெய் சத்து அதிகம் உள்ள பண்டங்களை அறவே ஓரம்கட்டி விடுங்கள். அவை மந்தத்தன்மையை அதிகப்படுத்துவதோடு தூக்கத்தையும் உண்டாக்கும். அதற்குப் பதில், பழங்களை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை உட்கொண்டால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு, படிப்பில் கவனம் பதிப்பதும் எளிதாக இருக்கும்.
படிப்பைக் காரணம் காட்டி காலை உணவை தவிர்ப்பது மாணவர்களின் பழக்கமாக இருக்கிறது. உண்மையில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண் டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் செய்யவே கூடாத தவறு அது. காலை உணவைத் தவிர்ப்பதால் உடல் இயக்கத்துக்கு அத்தியாவசியமான குளுகோஸ் சரியான அளவில் சுரக்காது. அது அதிவிரைவில் களைப்பை உண்டாக்குவதுடன், சிந்தனை வேகத்தையும் மட்டுப்படுத்தும். அதனால், பெற்றோர்கள் சிரமம் பாராமல் பிள்ளைகளுக்கு காலை உணவாக சப்பாத்தி, இட்லி, பொங்கல், பழ வகைகள் என மாற்றி மாற்றி கொடுக்க வேண்டும். முக்கியமாக பரீட்சை சமயங்களில் பிள்ளைகளுக்குக் கட்டாயம் சாப்பாடு கொடுக்க வேண்டும். சாப்பிடாமல் செல் லும்போது உண்டாகும் டென்ஷன் மயக்கத்தில் முடியும். கோடை காலத்தில்தான் தேர்வுகள் நடை பெறும் என்பதால் நீர் ஆகாரமான பழச்சாறு, மோர் ஆகியவற்றை இடைவேளைகளில் குடிக்கச் சொல்லுங்கள். இதனால், உடல் உஷ்ணத்தைத் தவிர்க்கலாம். பொறித்த உணவுகளை கண்ணிலேயே காட்டாதீர்கள். அவை மந்தத் தன்மையை ஏற்படுத்திவிடும்'' என்று அலர்ட் செய்கிறார்

Courtesy : Vikatan