“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” رَّبِّ زِدْنِي عِلْمً -அல் குர்ஆன் : 20 -114
கல்வி கற்றவர்களாக இருங்கள் ; கற்றுக்கொடுப்பவர்களாக இருங்கள்;
கற்பவர்களுக்கும் கற்றுக்கொடுப்பவர்களுக்கும் உதவி செய்பவர்களாக இருங்கள் - நபி மொழி

Wednesday, February 9, 2011

சுற்றுச்சூழல் பாதுகாக்க சில குறிப்புகள்...

வீடு, அலுவலகங்களில் குண்டு பல்புகள் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள்!

வீடு கட்டும்போது முழுக்கவும் கான்க்ரீட்டால் கட்டாமல், வீட்டின் பின்புறம் சிறு தோட்டம் அமைத்து செடிகள் வளர்க்கலாம்!

டிராஃபிக்கில் இருக்கும்போது வண்டியை 'ஆஃப்’ செய்துவிடுங்கள்!

குளிர் சாதனப் பெட்டிகளை அதிகமாக உபயோகிக்காதீர்கள்!

வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என்று தனியாகப் பிரித்துவைக்கலாம்!

கூடுமானவரை சொந்த வாகனங்களைத் தவிர்த்து, பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தலாம். சைக்கிள் உபயோகிப்பது இன்னும் சிறப்பு!

கடைகளுக்குச் செல்லும்போது பை எடுத்துச் செல்லலாம். அங்கு சென்று பிளாஸ்டிக் பைகளை வாங்கி பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள்!

ஒரு முறை உபயோகப்படுத்திய பொருட்களை மீண்டும் இன்னொரு முறைப் பயன்படுத்த முடியுமா என்று பார்க்க வேண்டும். முடிந்தால் அதை நடைமுறைப்படுத்துவது நல்லது!

மறுசுழற்சி செய்யத்தக்க பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவது செலவுகளைக் குறைப்பதுடன் சூழலையும் பாதுகாக்கும்!

கணினியில் பிரின்ட்-அவுட் எடுக்கும்போது ஒரு தாளின் இரண்டு பக்கத்தையும் பயன்படுத்தலாம். இதனால் பேப்பர் பயன்பாடு குறையும்!

பள்ளி, கல்லூரி, அலுவலகம் ஆகியவற்றில் சிறு குழுக்களை ஏற்படுத்தி சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை நடத்தலாம்!

- இவை எல்லாம் அடிப்படை விஷயங்கள். இவற்றை நீங்கள் பின்பற்றினாலே சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றுகிறீர்கள் என்பது தெளிவாகும்!

No comments:

Post a Comment