ஒவ்வொரு குழந்தையும் திறமை வாய்ந்தவர்களே. மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசுவது மிகப்பெரிய தவறு. அவர்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டுவர கால அவகாசமும், வாய்ப்பும் அளிக்க வேண்டும். பெரியவர்களின் பெருமைக்காக, குழந்தைகளின் உணர்வுகளை காயப்படுத்தி விடுகிறோம். இயற்கையாக நடக்க வேண்டிய விஷயத்தை வேகமாக எதிர்பார்த்தால், தவறான விளைவுகள் ஏற்படும்.அதே போல் வீட்டுக்குள் இது அப்பா குழந்தை, அம்மா குழந்தை என பிரிவினை செய்யாதீர்கள். அது குழந்தைகளின் மனதில், தேவையில்லாத வேறுபாட்டை உருவாக்கும். இன்றைய சூழலில் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. பல்வேறு பயம் காரணமாக குழந்தைகளை தனியாக அனுப்புவதில்லை. அதனால், குழந்தை ஓரளவு வளர்ந்தவுடன், வெளியில் செல்லவே பயப்படுவதாக குறை கூறுகிறோம்.ஆறு வயதாகும் போதே, குழந்தையின் மூளை முழு வளர்ச்சி அடைகிறது.
அதற்கு பிறகே, முழுமையாக கற்கும் திறன் கிடைக்கும். ஆனால் அவசர யுகத்தின் போட்டி காரணமாக இன்று இரண்டரை வயதிலேயே குழந்தைக்கு ஏ.பி.சி.டி., கற்பிக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம்.வீட்டில் எந்த ஒரு மொழியையும் முழுமையாக கற்றுத்தர பெற்றோர் முயற்சிக்க வேண்டும். தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி வார்த்தைகளை கலந்து பேசும் குழந்தை, பள்ளிக்கு சென்று கல்வி கற்கும் போது தடுமாறுகிறது. கார்ட்டூன் டிவி சீரியல் உருவாக்குபவர்கள் குழந்தையின் மனநிலையை நன்கு புரிந்து வைத்துள்ளனர். அதே போல், குழந்தையின் உணர்வுகளை புரிந்து வழிநடத்தினால், அவர்கள் அறிவாளிகளாக வளருவர். குழந்தைகளுடன் உட்கார்ந்து பேசி, அவர்களை புரிந்து கொள்வதில், பல பெற்றோருக்கு நேரம் மற்றும் ஆர்வம் இருப்பதில்லை.நாட்டில் எட்டாயிரம் மாணவ, மாணவியர் தற்கொலை செய்துகொள்கின்றனர். அதில், 10 சதவிகிதம் பேர் மட்டுமே படிக்காதவர்கள். மீதமுள்ளவர்கள் அனைவரும் நன்கு படிக்கும் திறன் கொண்டவர்கள். பெற்றோரின் மனநிலையை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல், அவர்கள் தற்கொலை முடிவை எடுக்கின்றனர்.படிப்பு மட்டுமே அறிவாக கருதாமல், அனைத்து சூழல்களையும் எதிர்கொள்ளும் திறன் படைத்த குழந்தைகளை வளர்ப்பது பெற்றோரின் கையில்தான் உள்ளது

No comments:
Post a Comment